/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மயானத்திற்கு செல்ல ரோடு வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
மயானத்திற்கு செல்ல ரோடு வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 06:24 AM
கமுதி: கமுதி அருகே மீட்டாங்குளம் கிராமத்தில் பொது மயானத்திற்கு செல்ல ரோடு வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகேவல்லந்தை ஊராட்சி மீட்டாங்குளம் கிராமத்தில்200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொது மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் பல கி.மீ., சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.
இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ்சில் கொண்டுவரப்படும் உடலை கூட தோளில் துாக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே மீட்டாங்குளம் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு செல்ல ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.