/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த கோரிக்கை
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த கோரிக்கை
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த கோரிக்கை
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 16, 2025 11:53 PM
சாயல்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாயல்குடி, கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சென்னை செல்வதற்கு ஆம்னி பஸ்களில் செல்கின்றனர். அதே போல சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை விட கூடு தலாக ஆம்னி பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
நா.த.க., ராமநாத புரம் மேற்கு மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் விடுமுறை கொண்டாட்டத்திற்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் சூழல் உள்ளது.
இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமை யாளர்கள் எப்போதும் வாங்கும் கட்டணத்தை விட இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு வரை கூடுதலாக வாங்கு கிறார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.