/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் தகன மயானத்தில் நிர்ணயித்த கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை
/
மின் தகன மயானத்தில் நிர்ணயித்த கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை
மின் தகன மயானத்தில் நிர்ணயித்த கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை
மின் தகன மயானத்தில் நிர்ணயித்த கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 11:32 PM
சாயல்குடி:சாயல்குடி பேரூராட்சி மின் தகன மயானத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிப்பதை முறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
முன்பு இந்த மயானத்தில் திறந்தவெளியில் விறகு கட்டைகள் பயன்படுத்த உடல்களை தகனம் செய்து வந்தனர். சென்னையில் இயங்கும் பேரூராட்சி இயக்குனரக உத்தரவின் படி புதிய கட்டமைப்புடன் கூடிய மின் மயானம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்த மின் தகன மயானத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
சாயல்குடியைச் சேர்ந்த தன்னார்வலர் நாகேந்திரன் கூறியதாவது:
சாயல்குடி பேரூராட்சியால் நிர்வகிக்கப்படும் மின் தகன மேடையில் ஏழை மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்களது இறுதிச் சடங்குகளை செய்கின்றனர். பேரூராட்சி நிர்வாக கூட்டத்தில் இயற்றப்பட்ட
தீர்மானத்தின்படி ரூ.500 ரசீது மற்றும் கூடுதலாக எரிபொருள் செலவினம், பணியாளர் கூலி உட்பட ரூ.2000 என மொத்தம் ரூ.2500 வசூலிக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள மின் மயானத்தில் ரூ. 5000, மறுநாள் மயானத்தில் கலயத்தில் சாம்பல் எடுப்பதற்கு
ரூ.1000 தனியாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இதர பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வசூலிக்க கூடிய மின் தகன மேடைக்குரிய கட்டணத்தை முறையாக வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்வதால் ஏழை மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சேவை நோக்கோடு செய்ய வேண்டிய இவ்விஷயத்தில் கூடுதல் கட்டணம் கூடுதல் நிதிச் சுமையை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே முறையாக இறுதிச் சடங்கிற்கான கட்டணத்தை நிர்ணயித்து உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். மயானத்தில் குவிந்துள்ள இதர எலும்பு கழிவு பொருட்களை உடனுக்குடன் அகற்றி துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.