/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பம் அகற்ற கோரிக்கை
/
வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பம் அகற்ற கோரிக்கை
வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பம் அகற்ற கோரிக்கை
வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பம் அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2025 11:03 PM

கமுதி; முதுகுளத்துார் கமுதி ரோடு பாக்குவெட்டி அருகே வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் குண்டாறு வடிநில உபகோட்டத்தில் ரெகுநாத காவிரி, களரி கால்வாய் உள்ளது. புல்வாய்க் குளத்தில் துவங்கி எஸ்.பி., கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம், முதுகுளத்துார், கருமல், இளஞ்செம்பூர், தேரிருவேலி, உத்தரகோச மங்கை, களரி வரை 41 கி.மீ., கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப் படாததால் மணல் மேடாகி யும், சீமை கருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு ரூ.16 கோடியில் துார்வாரும் பணிகள் நடந்துள்ளது. முதுகுளத்துார் கமுதி ரோடு பாக்குவெட்டி அருகே செல்லும் வரத்து கால்வாய் நடுவில் மின்கம்பம் உள்ளது.
அந்த பகுதியில் மட்டும் மணல்மேடாக வைக்கப்பட்டு மற்ற இடங்களை துார்வாரப்பட்டுள்ளது. வரும் காலங்களில் திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாயில் செல்லும் போது மணல் அரிப்பு ஏற்பட்டு மின்கம்பம் விழும் நிலை உள்ளது. இதனால் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் வரத்து கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

