/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மீண்டும் மாணிக்கவாசகர் பெயர் வைக்க கோரிக்கை

ADDED : ஆக 11, 2025 03:48 AM

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு மாணிக்கவாசகர் என்ற பெயர் இருந்துள்ளது, அப்பெயரையே மீண்டும் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டில் உத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதற்குமுன்பு மாணிக்கவாசகர் உயர்நிலைப்பள்ளி என ஆரம்பத்தில் இருந்த பெயருடன் செயல் பட்டது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமான உத்தரகோசமங்கையில் அவரது பெயரால் இயங்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அவரின் பெயர் நீக்கப்பட்ட நிலையில், அரசு மேல் நிலைப்பள்ளி என்றவாறு உள்ளது.
எனவே மீண்டும் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மாணிக்கவாசகர் பெயரை சூட்ட வேண்டும். அதற்கு பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.