/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற வைகை அணை நீர்; ஆற்றை சீரமைக்க கோரிக்கை

ADDED : அக் 27, 2025 04:06 AM

பரமக்குடி: வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமக்குடியை கடந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று சென்றது. தொடர்ந்து ஆற்றை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கடலில் கலக்காத ஆறு என்ற வகையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வைகை ஆறு அடைகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வைகை ஆறு உட்பட வலது, இடது பிரதான கால்வாய்கள் மற்றும் வெள்ளப் போக்கி கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு உபரி நீர் ராமநாதபுரம் நோக்கி வந்தது. ஆனால் பார்த்திபனுார் துவங்கி ராமநாதபுரம் வரை சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீரின் வேகம் தடை படுகிறது.
இச்சூழலில் பார்த்திபனுாரில் இருந்து நேற்று பரமக்குடி வந்தடைந்த தண்ணீர் ராமநாதபுரம் நோக்கி சென்றது. அப்போது தடுப்பணை பகுதிகள் உட்பட தொடர்ந்து தண்ணீர் கண்ணிற்கு தெரியாத அளவு மரங்கள் அடர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர்.
எனவே வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வைகை ஆற்றை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.