/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் - சென்னை பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை
/
முதுகுளத்துார் - சென்னை பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார் - சென்னை பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார் - சென்னை பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : மார் 19, 2025 04:33 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு பணிமனையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துாரில் ஒப்பிலான் பகுதியில் உள்ள அரசு பணிமனையில் இருந்து முதுகுளத்துார் வழியாக சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதில் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் சென்னை செல்வதற்கு உதவியாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது முதுகுளத்துாரில் இருந்து எந்த அரசு பஸ்சும் சென்னைக்கு இயக்கப்படாததால் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு மூன்று மடங்கு பணம் கூடுதல் செலவு செய்து தனியார் பஸ்சில் சென்னை செல்லும் நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அரசு தேவைக்கு என்று சிறப்பு பஸ் மட்டும் விழாக்காலங்களில் இயக்கப்படுகிறது. இதனை நிரந்தரமாக முதுகுளத்துார் பணிமனையில் இருந்த சென்னைக்கு இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்,வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.