/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
/
முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : பிப் 09, 2026 04:38 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பஸ் ஸ்டாண்டுகளில் முகூர்த்தநாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
திருவாடானை, தொண்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திருச்சி, காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். முகூர்த்த நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பஸ்களில் கூட்டம் உள்ளது. தற்போது இயங்கும் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்கு வரும்போதே நிரம்பி வழிவதால், வழியில் உள்ள கிராமங்களில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பஸ்களில் இடம் கிடைக்காமல் மணிக்கணக்கில் நிற்க வேண்டியுள்ளது. பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது. முகூர்த்த நாட்களில் தொண்டி மற்றும் திருவாடானையில் இருந்து மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும்.

