/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடிக்கு மாலை நேரம் பஸ்களை இயக்க கோரிக்கை
/
சாயல்குடிக்கு மாலை நேரம் பஸ்களை இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:55 PM
சாயல்குடி: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மாலை நேரத்தில் சாயல்குடி மார்க்கமாக செல்லக்கூடிய திருநெல்வேலி கோட்ட பஸ்கள் வரிசையாக செல்கின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உள்ள சாயல்குடிக்கு திருநெல்வேலி கோட்ட பஸ் தென்காசி வழித்தடம் மாலை 4:55 மணிக்கும், அதனை தொடர்ந்து பாபநாசம் செல்லக்கூடிய பஸ் மாலை 5:00 மணிக்கும், புளியங்குடி செல்லக்கூடிய பஸ் மாலை 5:10 மணிக்கும் எடுக்கின்றனர்.
அவை சாயல்குடிக்கு ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக வந்து விடுகின்றன. மாலை 6:15 முதல் 6:20 மணிக்குள்ளாக 3 பஸ்களும் ஒரே நேரத்தில் வரிசையாக செல்வதால் அடுத்து வரக்கூடிய பஸ்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே இக்கோட்டத்தில் இயங்கக்கூடிய பஸ்களை முறையாக குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.