ADDED : ஜன 09, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடர்ந்து நீட்டிக்கப்படாததால் பெங்களூரு, ராமநாதபுரம் இடையேயான நேரடி ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனால் பெங்களூரு, ஓசூரு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பஸ்சில் மட்டும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் மைசூரு, பெங்களூரு வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

