/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் மீன் சந்தை அமைக்க கோரிக்கை
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் மீன் சந்தை அமைக்க கோரிக்கை
ADDED : செப் 24, 2024 04:21 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் உள்ளது.
இதனால் இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மீன் மார்க்கெட் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் டி.டி. மெயின் ரோடு, புல்லமடை ரோடு, அக்ரகாரம் ரோடு என பல பகுதிகளில் மீனவப் பெண்கள் ரோட்டோரங்களில் மீன் விற்பனை செய்கின்றனர்.
ரோட்டோரங்களில் பல இடங்களில் மீன் விற்பனை செய்வதால் அப்பகுதி கடை உரிமையாளர்கள் மீனவ பெண்களை விரட்டியடிக்கும் நிலை உள்ளது.
இதனால் மீனவப் பெண்களும் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து வகை மீன்களையும் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே அதிகாரிகள் அனைத்து மீனவர்களும் ஒரே இடத்தில் மீன் விற்பனை செய்யும் வகையில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.