/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் காதி கிராப்ட் கடை அமைப்பதற்கு கோரிக்கை
/
திருவாடானையில் காதி கிராப்ட் கடை அமைப்பதற்கு கோரிக்கை
திருவாடானையில் காதி கிராப்ட் கடை அமைப்பதற்கு கோரிக்கை
திருவாடானையில் காதி கிராப்ட் கடை அமைப்பதற்கு கோரிக்கை
ADDED : செப் 05, 2025 11:17 PM
திருவாடானை: திருவாடானை பகுதியில் காதிகிராப்ட் கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காதி கிராப்ட் கடை இருந்தது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் கதர், பட்டு, வண்ண பாலியஸ்டர் ரகங்கள், கிராம உற்பத்தி பொருளான குளியல் சோப்பு வகைகள், சலவை சோப்புகள், தேன், சந்தன மாலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கதர் மற்றும் கிராம பொருட்களும் தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நாளடைவில் கடை மூடப்பட்டது. இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூறுகையில், குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது சில நகரங்களில் மட்டும் ஆங்காங்கே கடை உள்ளன. பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய், அகர்பத்திகள், சலவை சோப்பு போன்ற பல தரமான பொருட்கள் அறிமுகபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் தயாரிக்கப்படும் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் பொருட்கள் வாங்க கடன் வசதியும் இருந்தது. தரமான கதர், பட்டு துணிகள் விற்பனை செய்யப்பட்டதால் விரும்பி வாங்கினோம். மீண்டும் திருவாடானை பகுதியில் காதிகிராப்ட் கடை அமைக்க வேண்டும் அல்லது தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களை முன்னிட்டாவது தற்காலிகமாக கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.