/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 10, 2024 06:37 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராம மக்கள் 5 கி.மீ.,சென்று ரேஷன் பொருட்களை ஆட்டோவில் வாங்கி வரும் அவல நிலை தொடர்கிறது.
முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ரேஷன் கடை வசதியின்றி முதுகுளத்துார் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சேதுராமு கூறியதாவது: காத்தாகுளம் கிராமத்தில் 130க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் 5 கி.மீ., முதுகுளத்துார் சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்கும் நாட்களில் அத்தியாவசிய வேலைக்கும், விவசாயம் பணிக்கும் செல்ல முடியவில்லை.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ் இயங்குவதால் வேறு வழியின்றி இலவச பொருட்களை கொண்டு வருவதற்கு கூட பணம் செலவு செய்யும் அவலநிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமப்படுகின்றோம். மக்களின் நலன் கருதி கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

