/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெய்வயல்-அதங்குடி ஒன்றிய ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற கோரிக்கை
/
நெய்வயல்-அதங்குடி ஒன்றிய ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற கோரிக்கை
நெய்வயல்-அதங்குடி ஒன்றிய ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற கோரிக்கை
நெய்வயல்-அதங்குடி ஒன்றிய ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற கோரிக்கை
ADDED : செப் 21, 2024 05:16 AM

திருவாடானை: நெய்வயல்-அதங்குடி ஊராட்சி ஒன்றிய ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை பட்டியலில்சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சி அல்லிக்கோட்டை பாண்டி கோயில் புல்லாவயல், நெய்வயல், அதங்குடி வரை செல்லும் ரோடு 5.5. கி.மீ., உள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இந்த ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதே போல் 2 கி.மீ., உள்ள அல்லிக்கோட்டை- நாச்சியேந்தல் ரோடும் சேதமடைந்துள்ளது. இந்த ரோடுகள் போதிய பராமரிப்பு இல்லாததால் இரு ரோடுகளையும் தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டியலில் இணைக்க வலியுறுத்தபட்டுள்ளது.
நெய்வயல் ஊராட்சி தலைவர் ஆசை ராமநாதன் கூறியதாவது:
திருவாடானையில் இருந்து தேவகோட்டைக்கு டவுன் பஸ் இந்த ரோடு வழியாக ஒரு நாளைக்கு 14 முறை செல்கிறது. மழைகாலத்தில்பஸ் செல்ல முடியாத வகையில் சேதமடைவதால் டவுன் பஸ் நிறுத்தப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ரோட்டை தமிழக நெடுஞ்சாலைத் துறை பட்டியலில் இணைக்கும் பட்சத்தில் ரோட்டை சீரமைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.