sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முள்ளிமுனை அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

/

முள்ளிமுனை அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

முள்ளிமுனை அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

முள்ளிமுனை அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை


ADDED : டிச 02, 2024 04:55 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே முள்ளிமுனை அரசு நடு நிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் வலியுறுத்தினர்.

முள்ளிமுனையில் கடற்கரை ஓரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் தொடக்கபள்ளியாக துவங்கபட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

எனவே உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் கூறியதாவது- நடுநிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்க 20 கி.மீ.,ல் உள்ள தொண்டிக்கு செல்கின்றனர். பஸ் வசதியும் இல்லை.

இரண்டு கி.மீ. துாரம் நடந்து மணக்குடி பஸ்ஸ்டாப்பிற்கு சென்று பஸ் ஏறி தொண்டிக்கு செல்ல வேண்டும். இதனால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பள்ளியை தரம் உயர்த்த கோரி கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுத்தோம். மனு மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கபட்டு விபரம் தெரிவிக்கபடும் என பதில் வந்தது.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசை எதிர்பார்க்காமல் முன்னாள் மாணவர்கள் சார்பாக பல தேவைகளை நிறைவேற்றியுள்ளோம்.

பள்ளி வகுப்பறையில் ஸ்பீக்கர், காம்பவுண்டு கதவு, மின் ஒயர்கள் அமைத்து மின் சப்ளை என பல்வேறு பணிகள் நடந்துள்ளது.

இப்பள்ளிக்கு அருகே அரசு புறம்போக்கு இடம் உள்ளது. ஆகவே பள்ளியை தரம் உயர்த்தி அந்த இடத்தில் கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us