sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 

/

ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 

ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 

ராமநாதபுரத்தில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு; படிப்பை தொடர நடவடிக்கை 


ADDED : அக் 07, 2024 10:43 PM

Google News

ADDED : அக் 07, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்கப்பட்டு படிப்பை தொடர குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடவடிக்கை எடுத்துள்ளது.

நயினார்கோவில் அருகே நகரமங்கலம் கண்மாயில் கொத்தடிமை சிறுவன் ஆடு மேய்ப்பதாக குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, போலீசார் நகரமங்கலம் கண்மாய் பகுதிக்கு சென்றனர்.

அங்கு 14 வயது சிறுவன் நுாறு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்தனர். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெத்தனாட்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தந்தை ராஜா, தாய் நீலா என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து ராமநாதபுரம் அருகே காரடர்ந்தகுடியை சேர்ந்த நவசக்தி 56, என்பவர் சிறுவனை கொத்தடிமையாக பயன்படுத்தி ஆடு மேய்க்க வைத்தது தெரிய வந்தது.

சிறுவன் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன் தொடர்ந்து படிப்பதற்கு குழந்தைகள் நலக்குழு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொத்தடிமையாக்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us