/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
/
மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 24, 2025 11:43 PM
ராமநாதபுரம்:-பரமக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஆதார் விபரங்களுடன் சரி பார்க்கப்பட்டு பீகார் மாநிலம் சகர்சா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பரமக்குடி ரயில் நிலையத்தில் 2024 ஏப்.,16 ல்திரிந்த சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர்.
ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆதார் விபரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில்வழக்கு தொடரப்பட்டது. இதில் சிறுவனின் ஆதார் விபரங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி சிறுவன் பீகார் மாநிலம் பாட்னா அருகில் உள்ள சகர்சா மாவட்டம் என்பது தெரிய வந்ததால் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சிறுவனை பீகார் மாநிலம் சகர்சா மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அங்குள்ள அதிகாரிகள் சிறுவனின் பெற்றோரை வரவழைத்து விசாரித்து அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர்.