/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்
/
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்
ADDED : ஜூன் 11, 2025 05:48 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் முதுகுளத்துார் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணையை மதிக்காததை கண்டித்தும், சப் கலெக்டர் உத்தரவை நிறைவேற்றாத பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
சமரச கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான 5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு ஏலத்தின் போது நடைமுறையை பின்பற்றப்படும்.
பேரூராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஏலம் அறிவிக்கும் போது மாற்றுத்திறனாளி சங்கத்திற்கு முறையாக அறிவிப்பு விடப்படும் என்று அதிகாரிகள் கூறியதைடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கூறினர்.
உடன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் முனியசாமி, மயில்சாமி, தங்கப்பாண்டி கலந்து கொண்டனர்.