/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி ஆறு ஊராட்சி மக்கள் பாதிப்பு
/
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி ஆறு ஊராட்சி மக்கள் பாதிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி ஆறு ஊராட்சி மக்கள் பாதிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி ஆறு ஊராட்சி மக்கள் பாதிப்பு
ADDED : டிச 20, 2024 02:36 AM
திருவாடானை: ஆறு ஊராட்சிகளுக்கு 15 நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை அருகே குளத்துார், திருவெற்றியூர், முகிழ்த்தகம், புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு ஆகிய ஊராட்சிகளுக்கு குளத்துார் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
முகிழ்த்தகம் கிராம மக்கள் கூறியதாவது: குடிநீர் சப்ளை 15 நாட்களாக இல்லை. சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கிய நீரை குடங்களில் சேகரித்து எடுத்து வருகிறோம். குடிநீர் கிடைக்காமல் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
வீட்டு உபயோகத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்துகிறோம். ஆனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமமாக உள்ளது என்றனர்.