/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எட்., படித்த அமைச்சு பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

ADDED : செப் 19, 2024 04:44 AM

பரமக்குடி: பரமக்குடி கீழ முஸ்லிம்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நல சங்கத்தின் முதலாவது மாவட்ட பொதுக் குழு கூட்டம் மற்றும் மாவட்ட தேர்தல் நடந்தது.
மாவட்ட தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் முனியேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராமராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கணேசன் செயல் அறிக்கையும், பொருளாளர் வீரபாண்டி நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.
பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பதவி உயர்வு, இளநிலை உதவியாளர்கள்மற்றும் உதவியாளர்களின்ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பி.எட்., படித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய அரசின் ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கணக்கு தேர்வு முன் ஊதிய உயர்வு நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பரசுராம், செயலாளர் ஜான் பிரிட்டோ, பொருளாளர் வீரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.
பரமக்குடி கல்வி மாவட்ட தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.