/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை ஊராட்சியில் தீர்மானம்
/
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை ஊராட்சியில் தீர்மானம்
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை ஊராட்சியில் தீர்மானம்
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை ஊராட்சியில் தீர்மானம்
ADDED : பிப் 01, 2024 07:09 AM
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். விரைந்து டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.
பெரியபட்டினம் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.
மகப்பேறு சிகிச்சை, வளரிளம் பெண்களுக்கான மருந்து மாத்திரைகள் வழங்குதல், நாய்க்கடி, விஷக்கடி, காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்படுவோர் பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.
இங்கு எக்ஸ்ரே பிரிவு, யுனானி பிரிவு, பல் மருத்துவம், சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி, அலோபதி மருத்துவ பிரிவுகள் இருந்தும் துறை சார்ந்த டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
பெரியபட்டினம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
நாள்தோறும் புற நோயாளிகளாக நுாறுக்கும் அதிகமானோர் வருகின்றனர். ஊராட்சித் தலைவர் அக்பர் ஜான் பீவி கூறியதாவது:
பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் டாக்டர்கள் தேவை.
ஆனால் காலை முதல் மதியம் வரை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே டாக்டர் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலானோர் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்காக 25 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
போதுமான நர்சுகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் உரிய மருத்துவம் கிடைக்காத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் டாக்டர்களை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.