/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்து துறை ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி பாக்கியை வழங்க தீர்மானம்

ADDED : பிப் 01, 2024 06:49 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துாரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தின் 24ம் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.
மத்திய தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ராஜன், செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
மத்திய பொருளாளர் பேரானந்தன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
ஓய்வு பெற்றவர்களின் 99 மாதம் அகவிலைப்படி பாக்கியை வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்.
15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். 2003ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவருக்கும் பழைய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றோர் ஒப்பந்த பலன், பணப்பலன் உயர்வை வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடன் மத்திய செயலாளர் முருகேசன், துணை செயலாளர் மணவழகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.