/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலத்தடி நீர், நீர்நிலை பாதுகாக்க சீமை கருவேல மரங்களை அகற்ற தீர்மானம்
/
நிலத்தடி நீர், நீர்நிலை பாதுகாக்க சீமை கருவேல மரங்களை அகற்ற தீர்மானம்
நிலத்தடி நீர், நீர்நிலை பாதுகாக்க சீமை கருவேல மரங்களை அகற்ற தீர்மானம்
நிலத்தடி நீர், நீர்நிலை பாதுகாக்க சீமை கருவேல மரங்களை அகற்ற தீர்மானம்
ADDED : ஜூலை 10, 2025 02:31 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் அகில இந்திய விவசாய அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில், நிலத்தடி நீர், நீர்நிலைகளை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ராமபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
நதிகளை தேசிய மயமாக்கல், அனைத்து நதிகளையும் இணைத்து இந்தியாவின் தென்கடைசி மாநிலம் வரை நீர் பங்கீட்டை முறைப்படுத்த வேண்டும். விவசாயி விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயம் உரிமையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் விவசாயம் பாதிக்கும் போது அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் தொகை முழுமையாக செலவு செய்யப்படுவதை கண்காணிக்க விவசாய ஒருங்கிணைப்பு குழுவிற்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.
சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். நிலத்தடி நீர், நீர் நிலைகளை பாதுகாக்க சீமைக்கருவேலம் மரங்களை அகற்றி சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வர்த்தக சங்க நிர்வாகி முகமது இக்பால், த.மு.மு.க., மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் உட்பட விவசாயிகள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.