/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதிக்க கூடாது
/
கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதிக்க கூடாது
கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதிக்க கூடாது
கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதிக்க கூடாது
ADDED : பிப் 22, 2024 11:14 PM
ராமநாதபுரம் : கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் கடல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தெற்கு புது குடியிருப்பில் கிராமத்தலைவர் பாலு தலைமையில் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் தெற்கு புது குடியிருப்பு, இந்திரா நகர், மீனவர் நகர், தோப்பு வலசை ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.
சி.ஐ.டி.யு., மாவட்டச்செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி, நிர்வாகிகள் முத்தையா, ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.
இயற்கை பவளப்பாறைகளை பாதுகாக்க தவறி விட்டு செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் மீனவர்களை தீவுப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தடைவிதிக்கும்வனத்துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
கடல் அரிப்பை தடுக்க கடற்கரையில் 300 மீ.,க்கு நிலத்தை கையகப்படுத்தி சவுக்கு, பனை மரங்களை நடவு செய்ய வேண்டும். கடற்கரையோரங்களில் ரிசார்ட் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது.
விசைப்படகுகள் கடல் அட்டை மீன் பிடிப்பை பிரதானமாக கொண்டு கடற்கரையோரப்பகுதிகளில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம்மனு கொடுப்பது. நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் தனுஷ்கோடி முதல் ரோச்மா நகர் வரை மன்னார் வளைகுடா மீனவர்களை ஒன்று திரட்டி தீவுகளில் குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.