ADDED : ஜன 18, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கமுதி பகுதியில் அவரது படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் பாண்டியன், துணைச் செயலாளர் சுந்தர பாண்டியன், விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலாளர் சண்முகபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.

