ADDED : டிச 26, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்தி சிலை அருகே வீரமங்கை வேலுநாச்சியாரின் 229வது நினைவு நாளை முன்னிட்டு வீரமங்கை வேலுநாச்சியார் ஆட்டோ உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணை செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஜெயமுருகன் முன்னிலை வகித்தனர். அப்போது வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர்.
செயலாளர் சேதுமாதவன், பொருளாளர் மாரிமுத்து உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

