/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வண்டல் மண் எடுக்க அனுமதிதர ரூ.4000 லஞ்சம் வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஜீப் டிரைவர் கைது

ADDED : செப் 29, 2024 02:34 AM

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனுாரில் கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க ரூ.4000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் 40, தாசில்தார் வாகன டிரைவர் சத்தியநாதன் 45, கைது செய்யப்பட்டனர்.
கடலாடி தாலுகா ஆப்பனுாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 35. இவரது தந்தை பெயரில் ஆப்பனுார் பெரிய கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுக்க இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான அனுமதி பெறுவதற்காக கடலாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள், தாசில்தாரின் வாகன டிரைவர் சத்தியநாதன் ஆகியோரிடம் விபரம் கேட்டுள்ளார்.
கண்மாயில் மண் எடுக்க அனுமதி பெற தங்களுக்கும், தாசில்தாருக்கும்சேர்த்து ரூ.4000 லஞ்சம் கேட்டனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமச்சந்திரன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியபடி ரசாயனம் தடவிய 4000 ரூபாய் நோட்டுகளை நேற்று கடலாடி தாலுகா அலுவலகத்தில் வைத்து தாசில்தார் டிரைவர் சத்தியநாதனிடம் ராமச்சந்திரன் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த போலீசாரைக் கண்டதும் சத்தியநாதன் தப்பி ஓடினார்.
அவரை துரத்திப்பிடித்த போலீசார் கைது செய்தனர். அவரது வாக்குமூலம் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ரெபேக்காளையும் கைது செய்தனர்.