/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் நகராட்சி கழிப்பறையில் வசூல் குறைவால் வருவாய் இழப்பு
/
ராமேஸ்வரம் நகராட்சி கழிப்பறையில் வசூல் குறைவால் வருவாய் இழப்பு
ராமேஸ்வரம் நகராட்சி கழிப்பறையில் வசூல் குறைவால் வருவாய் இழப்பு
ராமேஸ்வரம் நகராட்சி கழிப்பறையில் வசூல் குறைவால் வருவாய் இழப்பு
ADDED : டிச 11, 2024 05:31 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நகராட்சி கட்டண கழிப்பறையில் வசூல் குறைவாக உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் அருகில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறை கட்டடம், குளிக்கும் வசதி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை ஓராண்டு குத்தகைக்கு ரூ.4.50 லட்சத்திற்கு தனியாருக்கு விட்டனர். ஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் அழுத்தத்தால் அடுத்தடுத்து தனியாருக்கு டெண்டர் விடாமல் நகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
பின் கடந்த ஓராண்டாக நகராட்சி நிர்வாகம் கழிப்பறை, குளியல் அறையை நிர்வகித்து பக்தர்களுக்கு தலா ரூ. 20 முதல் 30 வரை கட்டணம் வசூலிக்கிறது. நகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயை ஊழியர்கள் நகராட்சியில் செலுத்தி கணக்கு காட்டுகின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என மக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே கழிப்பறை மற்றும் குளியல் அறையை நகராட்சி நிர்வாகம் நிர்வாகிப்பதை கைவிட்டு தனியாருக்கு டெண்டர் விட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.