/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வருவாய்த்துறை அலுவலர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 22, 2024 11:11 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.
மாவட்டத்தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாவட்டங்களில் கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மைக்கான பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகளை செம்மையாக செய்திட கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சங்க பொருளாளர் செல்லப்பா, கலெக்டர் அலுவலக பணியளர்கள், தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. பிப்.27 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
*திருவாடானையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் அமுதன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.