/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு
/
விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு
ADDED : ஜன 03, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுகிய கால மகசூல் தரக் கூடிய நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியுள்ளன.
குறிப்பாக சித்தூர்வாடி, வடக்கு ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி, உப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டி உள்ளன.
இந்நிலையில் பெரும்பாலான நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் விளைந்த நெற் கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன.
விளைந்த நெல் வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான சூழல் இல்லாததால் தெற்கு ஊரணங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

