/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலால் விளைச்சல் குறைவு ஆர்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகள் பாதிப்பு

ADDED : டிச 30, 2024 07:10 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புகையான் நோய் தாக்குதலால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் நெல் பயிர்கள் மகசூல் நிலையை எட்டி உள்ளன. இந்த நிலையில், மங்கலம், அத்தனுார், அண்ணாமலை நகர், அழிந்திகோட்டை, இருதயபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், நெல் பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளன. இந்த நிலையில், பெரும்பாலான நெல் வயல்களில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக, நெல் பயிர்கள் வளர்ச்சி குன்றி, வயல்களில் இடை இடையே, நெல் பயிர்கள் கருகி சாவியாக மாறி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு பல ஆயிரங்கள் செலவு செய்துள்ள நிலையில், புகையான் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புல்லமடை, வல்லமடை, மேலமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம், சிலுகவயல், இரட்டையூருணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வயல்களில் அதிக அளவில் புகையான் நோய் தாக்குதலால் நெல் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.