/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்ததால் விபத்து அபாயம்
/
வரத்து கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்ததால் விபத்து அபாயம்
வரத்து கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்ததால் விபத்து அபாயம்
வரத்து கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்ததால் விபத்து அபாயம்
ADDED : ஆக 15, 2025 11:16 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே வரத்து கால்வாய் மடையில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே வரத்து கால்வாய் தண்ணீர் செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மடை அமைக்கப்பட்டது. ரோட்டோரத்தில் மடையுள்ளதால் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
இந்நிலையில் முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடையில் தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது.
இதனால் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.