/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எச்சரிக்கை போர்டு இன்றி விபத்து அபாயம்
/
எச்சரிக்கை போர்டு இன்றி விபத்து அபாயம்
ADDED : ஏப் 05, 2025 05:49 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஆற்றுப்பாலம் அருகே ரோடு விரிவாக்கம் பணி நடைபெற்று வந்த நிலையில் எச்சரிக்கை போர்டு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிய பாலம், ரோடு விரிவாக்கப் பணி நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்பு, பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. தற்போது புதிதாக பாலம் அமைக்கப்பட்டு பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது.
ரோடு விரிவாக்கம் முடிந்துள்ள நிலையில் முதுகுளத்துாரில் இருந்து ஆற்றுப்பாலம் வழியாக அபிராமம் செல்லும் ரோட்டில் பிரிந்து செல்வதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.