/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகளவு வைக்கோல் ஏற்றும் லாரிகளால் விபத்து அபாயம்
/
அதிகளவு வைக்கோல் ஏற்றும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : பிப் 17, 2024 10:52 PM

திருவாடானை: அதிக உயரத்தில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பின் வைக்கோலை கட்டுகளாக கட்டி விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கால்நடை தீவனத்திற்காக கேரளா போன்ற மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர்.
இந்த வைக்கோல் கட்டுகள் லாரியில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிக உயரத்தில் அடுக்கி வைத்துக் கொண்டு செல்லபடுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் போது மின்கம்பிகள் உரசுவதால் தீப்பிடித்து எரியத்துவங்குகிறது.
சில நாட்களுக்கு முன் திருவெற்றியூரில் ஏற்பட்ட விபத்தில் வைக்கோல்கட்டுகள் சாலையில் சிதறி எரிந்ததால் 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடக்கிறது. மின் கம்பிகள் உரசும் வகையில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.