/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிக பாரத்துடன் வைக்கோல் ஏற்றுவதால் விபத்து அபாயம்
/
அதிக பாரத்துடன் வைக்கோல் ஏற்றுவதால் விபத்து அபாயம்
அதிக பாரத்துடன் வைக்கோல் ஏற்றுவதால் விபத்து அபாயம்
அதிக பாரத்துடன் வைக்கோல் ஏற்றுவதால் விபத்து அபாயம்
ADDED : ஜன 15, 2024 04:35 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்தனர். இந்தாண்டு பருவமழை அதிகம் பெய்ததால் ஏராளமான கிராமங்களில் நெல்வி வசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைநீர் தேங்காத மேடான பகுதியில் சில இடங்களில் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து வந்தனர்.
வைக்கோலை சேகரித்து வைத்திருந்தனர். இந்நிலையில் கால்நடை தீவனமாக வைக்கோலை விற்பனை செய்கின்றனர்.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல்களை கால்நடைகள் தீவனமாக வாங்கிச் செல்கின்றனர். அப்போது டிராக்டர், சரக்கு வாகனங்களில் அதிக பாரத்துடன் ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வளைவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.