ADDED : ஜூன் 27, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கடைகள் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்கிறது.
இந்நிலையில் முதுகுளத்துார் பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பிள்ளையார் கோயில் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் முறையாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. அங்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.