ADDED : மே 11, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளத்தில் 2022 முதல் காட்சி பொருளாக ஆர்.ஓ., பிளான்ட் உள்ளது.
ரூ.7 லட்சம் திட்ட மதிப்பீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் சோலார் மூலம் இயங்கக்கூடிய ஆர்.ஓ., பிளான்ட் நிறுவப்பட்டது.
முறையாக பராமரிப்பு இல்லாததால் இத்திட்டம் மூன்றாண்டுகளாக செயல்பாடின்றி முடங்கி யுள்ளது.
எனவே இதனை நிறுவிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும்.
மீண்டும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
