/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேதலோடையில் பயன்பாடு இல்லாத ஆர்.ஓ., பிளான்ட்
/
மேதலோடையில் பயன்பாடு இல்லாத ஆர்.ஓ., பிளான்ட்
ADDED : ஏப் 28, 2025 05:46 AM

ரெகுநாதபுரம்: -ரெகுநாதபுரம் அருகே மேதலோடை ஊராட்சியில் கடந்த இரண்டு வருடமாக ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாடு இன்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
மேதலோடை ஊராட்சியில் கடந்த 2018ல் ரூ. 14 லட்சத்து 97 ஆயிரத்தில் உவர் நீரை நன்னீராக மாற்றும் ஆர்.ஓ., பிளான்ட் நிறுவப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஓசோன் டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித பயன்பாடும் இன்றி உள்ளதால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ. 12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மேதலோடையைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் கூறியதாவது: மேதலோடை ஊராட்சி நிர்வாகம் மூலம் பராமரிப்பு செய்வதற்காக குடம் ரூ. 4க்கு விற்பனை செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வருவாய் கொண்டு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்.ஓ., பிளான்ட் பழுது நீக்கம் செய்யப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்காக கிராம மக்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டி உள்ளது.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் ஆர்.ஓ., பிளான்டில் பழுது நீக்கம் செய்து வழக்கம் போல் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.

