/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு ஊழியர்கள் ரோடு மறியல்: 168 பேர் கைது
/
சத்துணவு ஊழியர்கள் ரோடு மறியல்: 168 பேர் கைது
ADDED : ஆக 20, 2025 11:36 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரோடு மறியல் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாயதமிழ்ச் செல்வி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கணேசன் பேசியதாவது: சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளி களுக்கு உணவு கொண்டு செல்ல உரிய வாகன வசதியும், ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புபடி வழங்கப்படுவதில்லை. சத்துணவு பணியாளர் களுக்கு ரூ.6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் பணியாளருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் மறியலில் ஈடுபட்ட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராமநாதன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.