/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்
/
12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்
ADDED : டிச 24, 2025 05:29 AM

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் கைது செய்த 12 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நேற்று மாலை 4:00 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.
இதனால் ராமேஸ்வரம், மதுரை போக்குவரத்து பாதித்தது. பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கபீபுரகுமான், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா மீனவர்களை சமரசம் செய்த பின் மறியல் கைவிடப்பட்டது. 90 நிமிடங்கள் சாலை மறியல் நடந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

