ADDED : ஆக 10, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் 2:00 மணி நேரம் சாலை மறியல் செய்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, மீனவர்களை சமரசம் செய்த பின் மறியலை வாபஸ் பெற்றனர்.
நேற்று மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மறியல் நடந்ததால் ரோட்டின் இருபுறமும் 2 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சாலையில் இரண்டுமணி நேரம் காத்திருந்து பெரிதும் அவதிப்பட்டனர்.