/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து கால்வாயை அடைத்து ரோடு அமைப்பு: தண்ணீர் செல்வதில் சிரமம்
/
வரத்து கால்வாயை அடைத்து ரோடு அமைப்பு: தண்ணீர் செல்வதில் சிரமம்
வரத்து கால்வாயை அடைத்து ரோடு அமைப்பு: தண்ணீர் செல்வதில் சிரமம்
வரத்து கால்வாயை அடைத்து ரோடு அமைப்பு: தண்ணீர் செல்வதில் சிரமம்
ADDED : மே 05, 2025 05:17 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் எட்டுச்சேரியில் இருந்து கடமங்குளம் செல்லும் ரோட்டில் குறுக்கே குழாயோ,பாலமோ அமைக்கப்படாமல் ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்லாமல் தடைபடுகிறது. இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வீணாகிறது.
முதுகுளத்துார் கண்மாய் 9 கி.மீ.,ல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் மூலம் முதுகுளத்துார், துாரி, எட்டிச்சேரி, செல்வநாயகபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வந்தனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டுசேரியிலிருந்து கடமங்குளம் கிராமத்திற்கு செல்லும் வழியில் வரத்து கால்வாய் கடந்து செல்லும் சாலையில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு எந்தவித குழாய்களோ பாலமோ அமைக்காமல் ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துாரி சேர்ந்த காசிராஜன் கூறியதாவது, கால்வாய் அடைப்பால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் செல்லாமல் வீணாகி விவசாய நிலங்களில் தேங்கிநிற்கிறது. இதுகுறித்து குண்டாறு உதவி பொறியாளருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது.
பின் நீர்வளத்துறை அதிகாரிகள் வரத்து கால்வாய் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ரோட்டை அகற்ற வேண்டும் என்று கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு உத்தரவு அளிக்கப்பட்டு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
விவசாயிகளின் நலன்கருதி பருவமழை காலம் துவங்குவதற்கு முன் வரத்து கால்வாய் நடுவில் அமைக்கப்பட்டிருந்த ரோட்டில் குழாயோ அல்லது பாலமோ அமைக்க வேண்டும் என்றார்.