ADDED : அக் 07, 2024 10:54 PM

அ நிறம் | அளவு
கமுதி : கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதி-முதுகுளத்துார் ரோடு பேரையூர் அருகே ஆனையூரில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. இந்த ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக நடப்பதற்கு லாயகற்றதாக உள்ளது.
வரத்துக் கால்வாயை கடந்து செல்வதற்கு அமைக்கப்பட்ட பாலத்தின் தடுப்பு சுவர்களும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவில் மக்கள் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே புதிதாக தார் ரோடு அமைக்கவும், பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
