ADDED : மே 30, 2025 11:40 PM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்டதால் சாலை சேதம் அடைந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக பத்திராதரவை கிராமத்தில் குழாய்கள் பதிப்பு ரூ.17.68 லட்சத்தில் 180 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க பணிகள் நடந்நது. கடந்த ஓராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை தண்ணீர் வழங்கப்படவில்லை. பத்திராதரவை கிராம பொதுமக்கள் கூறியதாவது:
திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பத்திராதரவை கிராமத்தில் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர கல்வெட்டில் 180 வீடுகளுக்கு இணைப்புகள் எனக் கூறியுள்ளனர். 120 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கியும் அதுபோக 60 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்காமல் விடுபட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல இடங்களில் பெயர்ந்து உள்ளதால் முதியவர்கள் சிறுவர்கள் விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சாலைகளை சீரமைத்து, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்றனர்.