/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடி, போகலுார் கண்மாய் ரோடு சேதம்
/
சத்திரக்குடி, போகலுார் கண்மாய் ரோடு சேதம்
ADDED : ஜன 16, 2025 04:51 AM

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் இருந்து போகலுார் செல்லும் கண்மாய் ரோடு சேதமடைந்த நிலையில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
பரமக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரக்குடி அமைந்துள்ளது. இங்கிருந்து போகலுார் வழியாக ஏராளமான கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தொடர்ந்து இதன் வழியாக நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளுக்கும் ரோடு வசதி உள்ளது. இந்நிலையில் போகலுார் கண்மாய் ரோட்டோரம் அரை அடிக்கும் மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குறுகிய மற்றும் வளைவுப் பகுதிகள் அதிகம் கொண்ட ரோட்டில் வாகனங்கள் தடுமாறுகின்றன. எதிரெதிர் திசைகளில் அரசு பஸ் மற்றும் விவசாய வாகனங்கள் செல்லும் போது தடுமாறி வருகின்றனர்.
எனவே விபத்தை தவிர்க்க போகலுார் ரோட்டை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.