ADDED : டிச 30, 2024 08:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியான அக்ரஹார வீதியில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விரைவில் ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
ராமநாதபுரம் அரண்மனை ரோடு, அக்ரஹார வீதி ஆகிய இடங்களில் ஏராளமான வணிகநிறுவனங்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள் என நகரின் மெயின் பஜாராக உள்ளது. டவுன் மட்டுமின்றி கிராமங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அக்ரஹார ரோடு சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரத்தில் சிறிய அளவில் விபத்துக்கள் நடக்கிறது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள அக்ரஹாரவீதி ரோட்டை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

