/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
/
தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்
ADDED : டிச 18, 2025 05:22 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலியில் இருந்து பரமக்குடி செல்லும் ரோடு சேதமடைந்து நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேரிருவேலி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பெரிய கையகம், அணிகுருந்தன், பிரபக்களூர், முத்துவிஜயபுரம், கொளுந்துறை வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு உள்ளது. இங்கு சில நாட்களாக ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
ஆட்டோ டிரைவர் சீனிவாசன் கூறியதாவது:
தேரிருவேலி - பரமக்குடிக்கு ரோடு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் சேதமடைந்த ரோட்டில் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

