/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு முன்பே சேதமடைந்த ரோடு : அதிகாரிகள் அலட்சியம்

ADDED : அக் 31, 2024 01:18 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அமைத்த தார் ரோடு பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது.
ராமேஸ்வரத்தில் 2019ல் ரூ.57 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கியது. இதற்காக ராமேஸ்வரம் கோயில் ரதவீதி, திட்டக்குடி தெரு, மேலத்தெரு, ரயில்வே பீடர் ரோடு, நடுத்தெரு, வர்த்தகன் தெரு உள்ளிட்ட பல தெருக்களி ரோட்டில் பள்ளம் தோண்டி குழாய் அமைத்தனர்.
மேலும் வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து
வெளியேறும் திடக்கழிவு மற்றும் கழிவு நீரை குழாய் வழியாக வெளியேற்றி ஓலைகுடா நரிக்குழி என்ற இடத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கழிவுநீரை சுத்திகரிக்க முடிவு செய்தனர்.
இதற்காக ஓலைக்குடாவில் இருந்து 1 கி.மீ.,க்கு சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல தார் ரோடு அமைத்தனர். திட்டப் பணிகள் முடியாத நிலையில் இந்த ரோடு பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமானதால் வாகனங்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே ரோடு சேதமடைந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.