நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2020ல் புதிதாக கட்டப்பட்டது.
நரிப்பையூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கான ரோடு சேதமடைந்து மணல் பரப்பாக உள்ளது.
எனவே அவசர சிகிச்சைக்கு செல்லும் வாகனங்கள் சேதமடைந்து ரோட்டில் சிக்கி சிரமப்படுகின்றனர். மக்களின் நலன் கருதி புதிய தார் ரோடு அமைக்க வேண்டும்.