/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் பார்லிமென்ட் நோக்கி பேரணி; மார்ச் 24 ல் நடத்துகின்றனர்

ADDED : மார் 21, 2025 11:30 PM
ராமநாதபுரம்; அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில் மார்ச் 24 ல் டில்லியில் பார்லிமென்ட் நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடக்கிறது.
பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 4 சட்டத்தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும். மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் மோட்டார் வாகன சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், டோல்கேட் கட்டணங்களை குறைக்க வேண்டும். பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டில்லியில் பார்லிமென்ட் நோக்கி அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரணி மார்ச் 24ல் நடக்கிறது.
ராமநாதபுரத்தில் சம்மேளன பொது செயலாளர் சிவாஜி கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் மார்ச் 24 டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்லவுள்ளனர் என்றார்.